மதுரை : மதுரை மாவட்டத்தில் பெண் சிசு கொலை, ஆணவக் கொலை, பெண்களுக்கெதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ. மணிவண்ணன், இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளை வளர்க்க இயலாத சூழ்நிலையின் போது தமிழக அரசின் சார்பில் தொட்டில் குழந்தைகள் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தி வருகின்றது. மேலும், தமிழக அரசு குழந்தைகள் நல அமைப்பு என்ற அமைப்பினை ஏற்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் காப்பகங்கள் அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்போடு பல குழந்தைகள் நல காப்பகங்கள் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன, அவர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் பெண் குழந்தைகள் காப்பகத்தில் வளர்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
எனவே பொது மக்களில் எவரும் பெண் சிசுக்கொலை குற்றச்செயலில் ஈடுபடக் கூடாது என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன், இ.கா.ப. அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
 
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
 
                                











 
			 
		    


