திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் (35) என்பவரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜா முரளி அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது கொலை வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவைத் தொடர்ந்து காவல் நிலைய போலீசார் முத்துக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா