நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு காவலன் செயலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மேலும் இன்றைய நவீன அறிவியல் உலகில் ஸ்மார்ட் போன் முக்கிய அங்கம் வகிக்கிறது.
எனவே அனைத்து மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவீர்கள் நமது நாட்டில் 60 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது இதில் தமிழகத்தில் மட்டுமே 5 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது இது மட்டும் இல்லாமல் சாதாரண போன்களும் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் பெண்களை பாதுகாக்க தமிழக காவல் துறை காவலன் செயலி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. எனவே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பெண்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் ஆப் பேஸ்புக் ஆகியவற்றை நீக்கிவிட்டு முதலில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும் எனவும் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை சார்பில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறை சார்பில் “காவலன் SOS” எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தனக்கு பாதுகாப்பற்ற சூழலை உணரும் பெண், செயலியில் உள்ள SOS எனும் பொத்தானை அழுத்தினால் போதும், அழைப்பவரின் இருப்பிடம் குறித்த தகவல் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும். அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் உள்ள இடத்திற்கு வந்து நிற்கும்.
செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்தும் போது, செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 விநாடிகளில் வீடியோ எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி விடும்.
செல்போன் சிக்னல் இல்லாத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் பயன்படுத்த முடியும்.
செயலியின் Registration பக்கத்தில் பெயர், செல்போன் எண்ணை பதிவு செய்து, அடுத்த பக்கத்தில் முகவரி, மின்னஞ்சல் முகவரி பதிவு செய்தால் போதும் காவலன் செயலி பயன்படுத்த தயாராகி விடும்.பெண்களின் அவசர உதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை, விளையாட்டுத்தனமாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
https://play.google.com/store/apps/details…
என கேட்டுக்கொண்டார்கள்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்