திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து பகுதியைச் சேர்ந்த ஜெகன் (29), என்பவர் தன்னை சமூக வலைதளத்தில் பெண் போல நடித்து மனுதாரரின் புகைப்படத்தை மார்பிஃங் செய்து அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரன், அவர்கள் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெண்கள் போல் போலியான கணக்கு தொடங்கி அதை வைத்து பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரை ஏமாற்றியும் மேலும் ஜெகன் என்பவரை ஏமாற்றிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜா (26) என்பவரை திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா