சென்னை : தாம்பரம் – முடிச்சூர் சாலையில், முடிச்சூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தாமோதரன், ‘நயாரா’ என்ற பெயரில், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் பங்க்கின் ஊழியர்கள், அலுவலகத்தை மூடி, வீட்டிற்கு சென்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், அலுவலகத்தின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்த மர்மநபர்கள், 50 ஆயிரம் ரூபாயை திருடி தப்பினர்.
இது குறித்து, பீர்க்கன்காரணை காவல் துறையினர், வழக்கு பதிந்து விசாரித்தனர். பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த காவல் துறையினர், வியாசர்பாடியை சேர்ந்த மதன், 21, சென்ட்ரலைச் சேர்ந்த லட்சுமனன்,18, திருவல்லிக்கேணியை சேர்ந்த (17), வயது சிறுவன் ஒருவன் ஆகியோரை, கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒரு மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.