சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
தொடர்ந்து காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குடியிருப்பு வளாகத்திலுள்ள W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி பாதுகாப்புடன் பணிபுரிய உத்தரவிட்டார்.
பின்னர், சென்னை பெருநர காவல் ஆணையாளர் அவர்கள் குன்றத்தூர் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். பின்னர் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைந்து தங்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்து, காவல் குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.
பின்னர் T-13 குன்றத்தூர் காவல் நிலையம் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, அம்பத்தூர் துணை ஆணையாளர் திரு.J.மகேஷ்,இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை