சென்னை : சென்னை K-7 ICF காவல் நிலையத்தில் தலைமைக்.காவலராக பணிபுரிந்து வந்த ருக்மங்காதன் (வயது 48). (2002 Batch) என்பவர் கீழ்பாக்கம், லூதரல் கார்டன் காவலர் குடியிருப்பில் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், ருக்மங்காதன் பணி முடித்து செல்லும் போது G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அஸ்பிரின் கார்டன் பகுதியில் இன்று (05.12.2023) மழைநீரில் இறந்து கிடந்தார். தகலறிந்த போலீசார் பிரேதத்தை மீட்டு KMC மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.