சிவகங்கை: நாடு முழுவதும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டங்களை அமல்படுத்தப்பட உள்ளதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை விளக்கி, கற்பிக்கும் பயிற்சி வகுப்பானது (New Law Refresher Course) காளையார்கோவில் மைக்கேல் பொறியியல் கல்லூரியில் இன்று 13.05.2024ம் தேதி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும், திரு.கலைக்கதிரவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்), திரு.நமச்சிவாயம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Cyber Crime Wing) மற்றும் திரு.ஸ்டாலின், மைக்கேல் கல்லூரி தாளாளர் அவர்களது முன்னிலையிலும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைக்காவல் கண்காணிப்பாளர்களான திரு.சிபிசாய் சௌந்தர்யன், சிவகங்கை உட்கோட்டம், திரு.பிரகாஷ், காரைக்குடி உட்கோட்டம், திரு.ஆத்மநாதன், திருப்பத்தூர் உட்கோட்டம், திரு.பார்த்திபன், தேவகோட்டை உட்கோட்டம், திரு.கண்ணன், மானாமதுரை உட்கோட்டம் மற்றும் மைக்கேல் கல்லூரி சார்பாக திருமதி.கற்பகம், கல்லூரி முதல்வர், திரு.விஸ்வநாதன், கல்லூரி நிர்வாக துணை இயக்குநர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருமதி.பிருந்தா, காவல் துணைக்கண்காணிப்பாளர் (DCB -II) அவர்கள் வரவேற்புரை அளித்தார்கள். இப்பயிற்சியானது மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவலர்களுக்கும் அளிக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட 205 நபர்களுக்கு இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் முடியும் வரை பயிற்சியிலிருக்கும் காவலர்களுக்கு வேறு எந்த பணியும் ஒதுக்காமல் சீரிய முறையில் கற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த துவக்க விழாவில் திரு.செல்வக்குமார், மாவட்ட தனிப்பிரிவு, திரு.ஆடிவேல், காளையார்கோவில் காவல் நிலையம், திரு.லோகநாதன், சாலைக்கிராமம் காவல் நிலையம் மற்றும் திரு.செல்வராகவன், திருக்கோஷ்டியூர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை உரை நிகழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வகுப்பின் முக்கியத்துவத்தையும், சட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கான வழிமுறைகளையும் விளக்கி கூறினார்கள். மேலும் PRIST UNIVERSITYயைச்சேர்ந்த பேராசிரியர்களான திருமதி.சுகந்தி, திருமதி.சுபலதா, திருமதி.சண்முகப்பிரியா, திரு.மணிவண்ணன், திருமதி.கௌசல்யா ஆகியோர் சிறப்பு பேராசியர்களாக வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் முடிவில் திரு.சிபிசாய் சௌந்தர்யன், துணைக்காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை உட்கோட்டம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.