நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் வேண்டுகோள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில், நச்சு புகைகளை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காமல், புகையில்லா போகி கொண்டாடுமாறு, காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.அறுவடை திருநாளை, தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்று தொட்டு கொண்டாடி வருகின்றனர். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகை, ‘பழையன கழிதலும், புதியன புகுதலுமாக’ கொண்டாடுகின்றனர்.
இந்நாளில், தமிழர்கள், தைத்திருமகளை வரவேற்கும் வகையில், தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி, அவைகளை ஒர் இடத்தில் சேர்த்து எரிப்பது வழக்கம். ஆனால், தற்போது, இந்த நிலை மாறி, பழைய பொருட்கள் எரிக்கும் பழக்கமாக மாறி வந்துள்ளது.டயர் போன்ற செயற்கைப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான, ‘கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின்’ மற்றும் நச்சுத் துகள்கள் ஆகியவற்றின் தீங்குகளை அறியாமல் எரித்து வருகின்றர்.இவ்வாறு எரிப்பதால், சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபட்டு, கண், மூக்கு, தொண்டை, தோல், மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல் நலக் குறைவு ஏற்படுகின்றன.
இவை தவிர, எரிப்பதால் ஏற்படும் புகையினால் நச்சுப் புகையும், நுண் துகள்களும் வெளியேற்றப்பட்டு அடர்த்தியான புகை மூட்டம் ஏற்படுகிறது. இவை காற்று மண்டலத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பதால் போக்குவரத்தும் பாதிக்கிறது. இது போன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சட்டப்படி குற்றமாகும்.இது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாசுக் கட்டுப்பாடு வாரியம் ‘புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாளை, போகி பண்டிகையினை, புகையில்லா போகியாக கொண்டாடி, பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் போகி மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்