இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் குற்றம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பிரபு , பிள்ளையார் அருந்ததி பாளையம், பனப்பாக்கம் என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம் விதித்து வேலூர் POCSO சிறப்பு நீதிமன்றம்இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார் .