தர்மபுரி : பாலக்கோடு, காரிமங்கலம் தாலுகாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் தொல்லை, குழந்தை திருமணம் போன்ற புகார்களை தெரிவிக்க பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் செல்ல வேண்டி இருந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று பாலக்கோட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பழகன் அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் சரக டிஐஜி திரு.பிரதீப்குமார். ஐபிஎஸ் ,அவர்களும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.மலர்விழி.ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜன்,MA,BL,.அவர்கள்,ADSP திருமதி.சுஜாதா, மற்றும் DSP திரு.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. M. தீபான்சி
தேசிய பொது செயலாளர்
NAI – சமூக சேவை குடியுரிமை நிருபர்கள் பிரிவு
சேலம்