திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தத்தில் காவல் நிலையம் பின்புறம் பழுதடைந்து இருந்த கட்டிடம் நத்தம் காவல்துறையால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பொது மக்களிடையே பேசியதாவது. பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும், நட்புறவு ஏற்படுத்தும் வகையில் பாய்ஸ் கிளப் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்று நல்லுறவை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.
இதில் ருரல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத், காவல் ஆய்வாளர் திரு.ராஜமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா