திண்டுக்கல் : பழனி அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்(18.01.2020 ) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்ற வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் பாலம்இராஜக்காபட்டி அருகே பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் பட்டைகளை கைகளில் அணிவித்து பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தினார்கள். மேலும் பாதயாத்திரை பக்தர்கள் சாலையின் இடதுபுறத்தில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட சாலையில் செல்லும் படியும், இரவு நேரங்களில் சாலைகளில் ஓய்வெடுக்காமல் தங்களுக்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் ஓய்வெடுக்கும் படியும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா