திருவள்ளூர்: குடியரசு தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு போதை வஸ்துகளிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு வண்ணம் நடைபெற்ற மராத்தான் போட்டியில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
இந்த மரத்தான் போட்டியானது பழவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு மெதூர் பாரதிநகர் வரை சென்று முடிந்தது.சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற, இந்த மரத்தான் போட்டியினை, சிறப்பு உதவி காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார்,தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பாரதி நகர் இளைஞர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தன்னார்வலர்கள் மேகநாதன்,மைக்கேல், சந்திரன்,சதிஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்