திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
வருகிற 08.02.2020-ம் தேதி தமிழகத்தின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு தினசரி பழனிக்கு திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். மேற்படி பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டும் சாலை விபத்துகளை தவிர்க்கும் பொருட்டும் 18.01.2020 ஆம் தேதி பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
பாதை யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதும் 18 இருசக்கர வாகன ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு மெகாபோன் பொறுத்தப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் போது மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. நடைபாதை இல்லாத இடங்களில் பாதுகாப்பு வளையம் வைக்கப்பட்டு மணல் சாக்குகள் பக்தர்கள் நடந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் பக்தர்களுக்கு wrist band மற்றும் ஒளிரும் குச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல வழித்தடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் அடிப்படைத் தேவைகளான குடிநீர் கழிப்பிடம் மற்றும் போதிய நீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ள பகுதி என்பதால் barricards வைக்கப்பட்டு பக்தர்கள் எவ்வித அச்சமும் இன்றி நடந்து செல்ல ஏதுவாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா