திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திண்டுக்கல் நகர காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் மற்றும் திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவல்நிலைய காவலர்களின் துணையோடு ஒளிரும் பட்டைகளை பழனி தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கைகளில் கட்டி பாதுகாப்பிற்காக வழங்கினர்.
மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில அறிவுரைகள் மற்றும் சாலைகளில் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா