சென்னை: சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது.
முன்னதாக புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் பள்ளிக்கு புதிதாக வண்ணம் புசப்பட்டு¸ பழுதடைந்த கழிவறையின் கதவுகள் மாற்றப்பட்டு¸ புதிய மேஜை¸ நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர். மேலும் பள்ளியில் பயிலும் 200 மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கல்வி¸ விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல வகையான மாணவர்களுக்கு பயன்படும் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த பள்ளியில் நடுத்தர வர்க்கத்திற்கு கீழ் வாழும் மாணவர்கள் அதிகம் படிப்பதால் இந்த பள்ளியை தேர்ந்தெடுத்து பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதாக புளியந்தோப்பு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்தார். காவலர்கள் பள்ளியை தத்தெடுத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் திரு.தினகரன், IPS, மேற்கு மண்டல இணை ஆணையர் திருமதி. விஜயகுமாரி, காவல் துணை ஆணையர் (புளியந்தோப்பு), திரு.ராஜேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.