சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
29.10.2019 நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் G-3 கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் நேற்று கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் ரோட்டில் பணியிலிருந்த போது, அங்கு சாலையில் கிடந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த, தலைமைக்காவலர் சிறிதும் தாமதிக்காமல் மண்வெட்டியை எடுத்து அருகில் கிடந்த மண்ணை அள்ளி சாலையில் கிடந்த பள்ளத்தில் போட்டு நிரப்பினார். இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் சிரமமின்றி பயணம் செய்தனர். மேலும் அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்கள் தலைமைக்காவலரின் பணியை பெரிதும் பாராட்டியுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்து போக்குவரத்து சீராக செல்வதற்கு உதவிய தலைமைக்காவலர் திரு.எஸ்.ஆனந்தனை (த.கா.26722) இன்று (30.10.2019) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள், நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.