கோவை : கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, இடிகரை கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் திருட்டுப்போன வாகனங்களை கண்டு பிடிக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.அருளரசு அவர்களின் அறிவுரையின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பிரிதிவிராஜ், உதவி ஆய்வாளர் திரு.செல்வநாயகம், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார், தலைமை காவலர் திரு.மகேந்திரன் ,தலைமை காவலர் திரு.வேலுசாமி, திரு.மகேஷ் குமார், காவலர்கள் திரு.ராஜேஸ், திரு.தமிழரசன் மற்றும் திரு.சதீஷ்குமார் ஆகியோருடன் நேற்று வாகன சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இவ்வழியே வந்த இருவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். அவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் இடிய கரையில் வசித்துவரும் தஞ்சாவூரை சேர்ந்த உதயநிதி மற்றும் தன்ராஜ் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், இடிகரை, அன்னூர், குன்னத்தூர் மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் 3 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் ஆகியவற்றை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு 40 லட்சம் இருக்கும்.
கைது செய்யப்பட்ட உதயநிதி என்பவர் மீது நீலகிரி, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மற்றொரு குற்றவாளியான தன்ராஜ் என்பவர் மீது, கோவை மாநகரம் ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் கள்ளநோட்டு வழக்கும், விருதுநகரில் சூலக்கரை காவல் நிலையத்தில் கள்ளநோட்டு வழக்கம் உள்ளது. மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்