திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை தலைவர் திருமதி. வனிதா IPS அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்கள் ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சி பெற்று வரும் 38 பெண் காவலர்களை சந்தித்து அவர்களுக்கு கபசுரக் குடிநீர், முககவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கியதோடு பயிற்சி காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார், மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கேட்டறிந்தார்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, மப்பேடு, ஊத்துக்கோட்டை, கனகம்மாசத்திரம் மற்றும் பொன்னேரி ஆகிய 4 காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்