சென்னை: காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .
சீனாவில் 77 நாடுகளின் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்ட உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் (19.9.2019) நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.