கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய செல்வராஜ் அபராதம் விதித்தார்.இதையடுத்து அவருக்கும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த 3 வாலிபர்களும் பெரும் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்தனர். காவலர் செல்வராஜைநடுரோட்டிலேயே வைத்து கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்றனர். இதையடுத்து ஏற்பட்ட வன்முறை மதக் கலவரமாக மாறியது. பஸ்கள் எரிக்கப்பட்டன, கடைகளும் வீடுகளும் சூறையாடப்பட்டன. இந்தவன்முறையை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1997ம் ஆண்டு அல்உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் அவர்களின்மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஜீனியர் அசிஸ்டெண்ட் வேலை வழங்கப்பட்டது. செல்வராஜ் மறைவின் போது பத்துமாத குழந்தை தற்போது 21 வயது.
கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ரத்தத் தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தன் தந்தையை இழந்த மகளுக்கு இன்று ஆறுதலாக அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS வழங்கினார்.