மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் என்பவர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ரமேஷ்குமார் தன்னிடம் இருந்து பட்டாசு வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு 4,63,36,840 ரூபாய். அந்தப் பணத்தை தராமல், ரமேஷ்குமார் மோசடி செய்துள்ளார். அத்துடன் அந்த பணத்தை கேட்ட தன்னை, கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதனைத்தொடர்ந்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையாளர் ஜஸ்டின் பிரபாகர் விசாரணையை மேற்கொண்டார். இதில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அச்சி ஊடகப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ரமேஷ்குமார், கோவிந்தராஜிடம் பட்டாசு வாங்கிவிட்டு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது நிருபனமானது. இதனைத்தொடர்ந்து ரமேஷ்குமார் உள்பட 9 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். ரமேஷ்குமார், அவரது மேலாளர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி