புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே E.மேட்டுபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஒருவர் தனது காதலருடன் பணி முடிந்து இரவு நேரத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டம் பகுதியில் சாலையோரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.
இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் பார்த்து அவர்களை பின் தொடர்ந்து காட்டுப் பகுதிக்குள் 3 பேரில் ஒருவன் கத்திமுனையில் காதலனை மிரட்டி கட்டிப்போட்டு, மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, காதலர்கள் அணிந்திருந்த நகை, பைக், மணிபர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். காதலர்கள் இருவரும் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே 29.05.2020 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, இருசக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த முருகன், நந்தகுமார், ஹேமராஜ் என்பதும், திருச்சி பைபாஸ் சாலையில் புதரில் பதுங்கி இருந்து வாகன ஓட்டிகளை தாக்கி நகை, பணம் பறிக்கும் பலாத்கார கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது. இது போன்று தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
முன்னதாக போலீசார் சுற்றி வளைத்த போது இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றதால் சறுக்கி விழுந்த இருவரின் இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் விராலிமலை போலீசார் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.