நீலகிரி : கொரானா தொற்று காரணமாக கடந்த நாற்பது நாட்களுக்கு மேல் 144 ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில், நேற்று தான் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் சில மதுபான பிரியர்களோ, தாங்களே, போதைக்காக மதுவை தயாரிக்கும் முயற்சியை அதிகம் ஈடுபட்டனர் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரட்டில் இருந்து பீர் தயாரித்தல், ரைஸில் இருந்து பீர் தயாரித்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே தடை உத்தரவை மீறி பொதுமக்கள் ஒன்றாக கூடி சீட்டாட்டம் விளையாடுவதாக வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன் அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசி மோகன் அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி அவர்கள் உத்தரவின் பேரில், உதவி ஊரக துணை கண்காணிப்பாளர் திரு.திருமணி அவர்கள் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் கண்காணித்து கள்ளச்சாராயம் விற்பவர்கள், சீட்டாட்டம் விளையாடுபவர்கள் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 06.05.2020 ஊரக காவல் ஆய்வாளர் திரு.தர்மராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர் திரு.மனோஜ் குமார், தலைமை காவலர் திரு. சுரேஷ், காவலர் அக்பர் அலி, FOP திரு.சுரேஷ் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் ரைஸ் பியர் தயார் செய்த இருவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் தடை செய்யப்பட்ட 15 லிட்டர் ரைஸ் பியர் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்