நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சிறப்பு அழைப்பாளர் காவல் உதவி ஆணையர் சென்தாமஸ் மவுண்ட் சரகம் திரு. அமீர் அஹமத் அவர்கள் கலந்துகொண்டு சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் திரு.அமீர் அஹமத் அவர்கள் பங்கேற்று உணவு வழங்கினார். காவல் உதவி ஆணையர் திரு.அமீர் அஹமத் அவர்கள், சிறந்த முறையில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். பொதுவாக, புறநகர் பகுதி என்றால், காவல்துறையினருக்கு சவால்கள் நிறைந்த பகுதியாக இருக்கும். குற்றங்களை தடுக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். ஆனால் திரு.அமீர் அஹமத் அவர்கள் சென்தாமஸ் மவுண்ட் சரக காவல் உதவி ஆணையராக பதவி ஏற்ற நாள் முதல் அப்பகுதியில் குற்ற சம்பவங்களை வெகுவாக குறைத்துள்ளார். பல குற்ற வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளார். திரு.அமீர் அஹமத் அவர்கள் போலீஸ் நியூஸ் பிளஸ் நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, இன்முகத்துடன் பசித்தோருக்கு உணவு அளித்து மகிழ்ந்தார்.
கத்திப்பாரா மேம்பாலம் ஜவர்கலால் ரோடு நாகாத்தம்மன் கோவில் அருகில் சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு (24.04. 2022) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணி அளவில் கைகளை சுத்தப்படுத்தி, சமூக இடைவெளியை ஏற்படுத்தி, முகக் கவசம், வெஜிடபிள் பிரியாணி, தண்ணீர் பாட்டில், வழங்கப்பட்டது. சாலையோரம் இருக்கக்கூடிய 750 ஏழை எளிய மக்களுக்கு முதியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, சமூக சேவை பிரிவு வடக்கு மண்டல பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா, சிறப்பு அழைப்பாளர் முகமது ரபிக் மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.