நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
உலகப்புகழ் பெற்ற, நாகூா் ஆண்டவா் தா்காவின் 463- ஆவது கந்தூரி மகோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சந்தனக்கூடு ஊா்வலத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் இன்றி அமைதியான முறையில் நடைப்பெற்றுள்ளது.
இந்த நிகழ்விற்கு இரவு முழுதும் அயராது பணியாற்றிய நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையை சேர்ந்த துணை காவல் கண்காணிப்பாளர்கள் ,ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலர்கள்,போக்குவரத்து காவலர்கள் ,ஊர்காவல்படை காவலர், ஆகிய அனைவருக்கும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தனது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறைக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படா வண்ணம் நாகூர் ஆண்டவர் தர்கா சந்தனக் ஊர்வலத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.