நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் நீலகண்டன், மகன், ஸ்ரீ நிகில் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் மாணவராக தேர்வு செய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளார், இவரின் இந்த நற்செயலை பாராட்டும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் நேரில் அழைத்து சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்கள். மேலும் மாணவரிடம் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் இதேபோல் வரும் அடுத்தடுத்த தேர்வில் நீங்கள் நிறைய சாதிக்க வேண்டுமென்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.