நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் இன்று காலை வருடாந்திர கூட்டு திரட்டு காவத்து பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்கள்.
பின்னர் காவலர்கள் மத்தியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்கள் தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு காவலர்களும் சுய கட்டுப்பாடு உடன் இருக்க வேண்டும் எனவும், நாம் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் சிறப்பு மிக்க நம் தமிழக காவல்துறைக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் எனவும், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருவேங்கடம் அவர்கள் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.