நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் உண்மைக்கு மாறான செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கூறியுள்ளார்கள்.