நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கணக்கில் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் அறிவுறுத்தல்படி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மிக சிறப்பான ஏற்பாட்டில் ஆயுதப்படை காவலர்கள் ஒன்றினைந்து வேட்டி- சட்டை, சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி குலவையிட்டு பொங்கல் வைத்தனர். இதை தொடர்ந்து, மேளங்களை இசைத்தும்,ட்ரம்ஸ் அடித்தும் உற்சாகமாக தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து வந்தனர் இவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் அணிந்து காவலர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வெகு விமர்சையாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் என ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். பின்னர், கிராமிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காவலர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் உடன் இணைந்து பங்காற்றி அசத்தினர். குறிப்பாக, பெண் காவலர்கள் பல்வேறு அழகு கோலம் மீட்டு தங்கள் கலைதிறனை வெளிப்படுத்தினர்.
நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பெண் காவலர்கள் தங்கள் கலை திறனை வெளிப்படுத்தும் கோலப்போட்டி, காவலர்கள் தங்கள் உடல் பலத்தை வெளிப்படுத்தும் கயிறு இழுத்தல் போட்டி, சாக்கு ஓட்டப்பந்தய போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கிராமிய மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பின்னர் சமத்துவ பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார் பின்னர் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியில் நாம் சமத்துவ பொங்கலை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் காவலர்கள் தங்களுக்குள் எந்த வேறுபாடுகளும் காட்ட கூடாது எனவும் அனைவரும் ஒற்றுமையாக மக்கள் பணி ஆற்ற வேண்டும். எனவும் மனிதநேயத்தோடு மக்கள் பணி புரிய வேண்டும் எனவும் காவலர்கள் கிடைக்கும் நேரங்களில் தங்கள் குடும்பத்தினர் உடன் செலவிட வேண்டும் எனவும் தவறான பாதைகளில் செல்ல கூடாது எனவும் கட்டுப்பாடு உடன் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் எனவும் காவலர்கள் தங்கள் பிரச்சனைகளை எந்த நேரமும் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் எதிர்கொள்ளும் உங்கள் பிரச்சனைகளை என்னிடம் தெரிவிக்கலாம் எனவும் அதற்கு உடனடி தீர்வு காணப்படும் எனவும் கூறினார்கள்.
பின்னர் சமத்துவ பொங்களின் இறுதி நிகழ்ச்சியாக காவலர்களுக்கு எற்பாடு செய்யப்பட்ட உணவினை காவலர்களுக்கு பரிமாறி பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு மகிழ்ந்தார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருவேங்கிடம் அவர்கள் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள் ஆகியோர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.