நாகப்பட்டினம் : மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தேக்கு மரக்கன்று ஒன்று நட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள் இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் குறிப்பாக நாகப்பட்டினம் உட்கோட்டம், வேதாரணியம் உட்கோட்டம், மயிலாடுதுறை உட்கோட்டம், சீர்காழி உட்கோட்டம், மற்றும் அனைத்து காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் அலுவலகம், காவல் நிலையம்,உட்கோட்ட முகாம் அலுவலகம், காவலர் குடியிருப்பு வளாகம்,ஆயுதப்படை வளாகம், ஆகியவற்றில் மரக்கன்று நடப்பட்டது மேலும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் “மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம் ” என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் என அனைவரும் இதுவரை 1200(ஆயிரத்து இரு நூறு) பல்வேறு வகையான குறிப்பாக தென்னங்கன்று,நாவல்,வேம்பு என மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மரம் வளர்ப்பது என்பது “நமக்கு அனைத்தையும் அளித்த இயற்கைக்கு நாம் செய்யும் சிறு கைமாறு” என்றும்,ஒவ்வொரு காவலர்களும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதை சரிவர பேணிப் பாதுகாப்பதும் மரகன்று நடும் காவலர் தங்கள் பெயர் பலகை அமைத்து பராமரிப்பதும் மேலும் மர கன்றுகளை நட்டு தினந்தோறும் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பது நமது கடமையாகும் என்று நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தொரிவித்தார்கள்.
மேலும் இயற்கை வளங்களுக்கு எதிராக செயல்படுபவர் குறித்து கீழ்கண்ட தொலைபேசி எண்களில்:
9498100905,
8939602100,
04365242999,
04365248119,
24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.பிரகாஷ்