திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான அனுமந்தராயன் கோட்டை ,வக்கம்பட்டி,கூத்தாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம பொது மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டும் ஆத்தூர் தலுகா நரசிங்க ராஜா வாய்கால் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை உயரம் 4 அடியை ஒரு அடியாக குறைக்க சொல்லி வீடுகளில் கருப்பு கொடியையும்,கைகளில் கருப்பு துணியைகளை கட்டியும் 19.12.2019முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.இதை தொடர்ந்து போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்கின்ற நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் அவர்கள் கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றப்படும் என அப்பகுதி மக்களிடம் கூறி தொடர் போராட்டத்தை திரும்பப் பெறச்செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா