திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டியன் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்கள் மற்றும் நிலக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.தயாநிதி அவர்கள் HC-1844 திரு.நாகேந்திரன், Gr.I-673 திரு.முத்துப்பாண்டி, Gr.I-290 திரு.பாலமுருகன், Gr.I-1250 திரு.பால்பாண்டிதுரை ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அந்த நபரை வத்தலகுண்டு பகுதியில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (எ) குட்டையன் (37) என்பவர் என தெரியவந்தது, இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து 27 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா