திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஏசு ராஜசேகர் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வேடசந்தூர் நல்லமனார்கோட்டையைச் சேர்ந்த மல்லீஸ் முருகன் (26) என்பவர் எரியோடு பகுதியில் ஒருவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா. சக்திவேல் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் மற்றும் மல்லீஸ் முருகன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா