திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா. சக்திவேல் அவர்கள் தலைமையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இத்திருவிழாவில் செல்போன் ஒன்றை பக்தர் ஒருவர் தவறவிட்டு சென்றுவிட்டார். அதை திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை தலைமை காவலர் 962 திரு.ஹரி அவர்கள் எடுத்து அதை சோதனை செய்ததில் அந்த செல்போன் பெண் பக்தர் என்பவருடையது என உறுதி செய்தபின் செல்போனை அவரிடம் ஒப்படைத்தார். காவலர்களின் நற்செயலை பெண்ணின் உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா