மதுரை : வருகின்ற 30.10.2019-ம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊர்வலம் & பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதால், மதுரை மாநகரில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
1. 30.10.2019 அன்று லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 06.00 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் நுழைய தடை செய்யப்படுகிறது.
2. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செவதற்கு அனுமதி இல்லை.
3. நந்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் திரும்பி மாற்று பாதையாக ராஜா முத்தையா மன்றம், K.K.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, P.T.R. பாலம், காமராஜர் சாலை வழியாக செல்லவேண்டும்.
4. மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், இளைஞர் விடுதி (YOUTH HOSTEL), பந்தயதிடல் சாலை (RACE COURSE ROAD), தாமரை தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும்.
5. வடக்கு வெளிவீதியிலிருந்து யானைக்கால், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேஷன் ரோடு, M.M.லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, E2E2 சாலை, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல வேண்டும்.
6. திண்டுக்கல் ரோடு – தத்தனேரி பகுதியிலிருந்து அழகர்கோவில் ரோடு, நத்தம் ரோடு செல்லும் வாகனங்கள் குலமங்கலம் ரோடு, பாலம் ஸ்டேஷன் ரோடு சந்திப்பில் திரும்பி குலமங்கலம் ரோடு வழியாக சென்று மாற்று பாதைகளில் செல்ல வேண்டும்.
7. மேலமடை பகுதியிலிருந்து கோரிப்பளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும்.
8. தேவர் ஜெயந்தி விழாவிற்காக நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர பசும்பொன் செல்லும் இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுசாலை வழியாகச் செல்ல வேண்டும்.
9. தேவர் ஜெயந்தி விழாவிற்கு இரண்டு சக்கர வாகனத்தில் வருவோர் இருவர் மட்டுமே தலை கவசத்துடன் பயணிக்கவும், நான்கு சக்கர வாகனத்தில் வருவோர் அனுமதிக்கப்பட்ட நபர்களுடன் இருக்கை கச்சை (SEAT BELT) அணிந்து பயணிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே 30.10.2019-ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, வியாபார பெருமக்கள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களின் நலன்கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப்பதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை