சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் 24.01.2020 இன்று காலை 11.00 மணியளவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, காவல் ஆணையரகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஆர்.தினகரன்,இ.கா.ப., அவர்கள் (வடக்கு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப. ,அவர்கள் (தெற்கு), காவல் துணை ஆணையாளர் திரு.சுதாகர் இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு மற்றும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை பலர் கலந்துக்கொண்டனர்.
தேசிய வாக்காளர் தின உறுதிமொழி
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான,நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும்அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொருதூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை