சென்னை: தமிழ்நாடு மெடிக்கல் யூனிட் என்.சி.சி – சென்னை சார்பில் ஆவடி வேல்டெக் பொறியல் கல்லூரியில் நேற்று தேசிய மாணவர் படை முகாம் துவங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும் முகாமில், கடம்பத்தூர் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் செவ்வாப்பேட்டை அரசு ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைபள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்த ஆவடி காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர் மாணவர்களை நேற்று காவல் நிலையத்திற்கு, காவல் நிலையத்தின் செயல்பாடுகள், குற்ற புரிந்தால் எடுக்கப்படும் உடனடி நடவடிக்கைள், முதல் தகவல் அறிக்கை குறித்த தகவல்கள், காவல் துறையில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறப்பட்டது.
பின்பு காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர் அவர்கள் மாணவர்களை அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தினார். மாணவர்களை செவ்வாப்பேட்டை NSS அலுவலர் திரு.ஜான்சன் மற்றும் கடம்பத்தூர் NSS அலுவலர் திரு. சா.அருணன் ஆகியோர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
ஆவடி காவல் உதவி ஆணையர் திரு.ஜான் சுந்தர் அவர்கள் கோயம்பேடு, மதுரவாயல் உதவி ஆணையராக பணியாற்றி உள்ளார். கோயம்பேடு காவல் உதவி ஆணையராக இருந்தபோது இவர் தலைமையில் பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் வழக்குகள், வழிப்பறி வழக்குகளை திறம்பட செயல்பட்டு, அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நமது குடியுரிமை நிருபர்
திருமதி. S. ரமீசா
திருவள்ளூர்