சென்னை: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல். தெற்கு மண்டலத்தைச்சேர்ந்த சிறார் மன்றங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்பேரில், வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா 28.11.2019 அன்று சைதாப்பேட்டை, கோதமேடு பகுதியில் உள்ள காவலர் சிறார் பள்ளியில் நடைபெற்றது.
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 102 மாணவ, மாணவிகள், பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் இணை ஆணையாளர் திருமதி.மகேஸ்வரி, இ.கா.ப (தெற்கு) அடையாறு துணை ஆணையாளர் திரு.பொ.பகலவன், இ.கா.ப., புனித தோமையர் மலை துணை ஆணையாளர் திரு.பிரபாகர், இ.கா.ப, தி.நகர் துணை ஆணையாளர் திரு. அசோக்குமார், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், சிறார் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை