தென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சார்பாக, தேசிய தலைவர் ஆலோசனையின் பேரில் 15.12.2019அன்று குடியுரிமை நிருபர்கள் கூட்டத்தில் காவலர்களுக்கு காவலர் தின வாழ்த்து தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது. 24.12.2019 அன்று காலை தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு.பா. கோகுலகிருஷ்னன் அவர்களை சந்தித்து காவலர் தின வாழ்த்துக்களை தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, ஆலங்குளம் H1ஆலங்குளம் காவல் நிலையத்திற்குச் சென்று ஆலங்குளம் காவல் ஆய்வாளர் திரு.செல்வக்குமார் அவர்களுக்கு மலர் கொத்து கொடுத்து காவலர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ் மற்றும் காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் தென்காசி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது, ஆலங்குளம் பேருந்து நிலையம், அம்பை ரோடு, ஆலங்குளம் மார்க்கெட், அடைக்கலப்பட்டனம், மகிழ், முத்துகிருஷ்னபேரி, போன்ற முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி காவலர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை அனைத்தையும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் தென்காசி மாவட்ட செயலாளர் முனைவர்.ஞா. ஜோசப் அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வால் பொதுமக்களும் காவலர்களும் பெருமிதம் கொண்டனர்.