தென்காசி : தென்காசி மாவட்டத்தில் புதிதாக காவல் தொலைத்தொடர்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS மற்றும் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கோகுல கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தனர் மேலும் அதில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.தொலை தொடர்பு பிரிவில் ஆய்வாளர் திரு.விஜய சேகரன் அவர்கள் தலைமையில் ஐந்து சார்பு ஆய்வாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு,ஒரு உட்கோட்டத்திற்கு ஒரு சார்பு ஆய்வாளர் என்று நியமிக்கப்பட்டுள்ளனர்.. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திருமதி.சத்ய பிரபா,போக்குவரத்து ஆய்வாளர் திரு.பிரபு மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
ஜோசப் அருண் குமார்