இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருமதி.மகிபா (WPC 760) அவர்கள் பணி முடித்து செல்லும்போது காவனூர் அருகே கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரி எதிரே விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 38 வயது பெண்மணியை தனது துரித நடவடிக்கையால் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வாகனம் ஏற்பாடு செய்து மருத்துவமனையில் அனுமதித்தார். இவரது மெச்சத் தகுந்த செயலுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS மற்றும் காவல்துறை தலைவர் திரு.முருகன், IPS, (EOW) ஆகியோர் பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்