ஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி (7 வயது) என்ற டாபர்மேன் வகை பெண் நாயானது மாவட்ட காவல்துறைக்கு பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது.
அந்த மோப்ப நாயானது 06.05.2020 – ம் தேதி காலை 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதால், ஈரோடு கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சார்லஸ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு.ரமேஷ், மதுவிலக்கு பிரிவு திரு.சேகர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.