வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் (3/12/2022),விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ரவி, அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் அப்துல்லாபுரம் செல்லூர் கூட் ரோட்டில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போதும் குற்றவாளி முகமது பஷீர் மலப்புறம் கேரளா என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது மேலும் குற்றவாளியும் கஞ்சாவை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
















