திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக டாக்டர் விஜயகுமார் இ.கா.ப.இ அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மருத்துவரான அவர் 2009 ஆண்டு, காவல்துறை மீது கொண்ட ஆர்வத்தால், இந்திய காவல் பணியில் (IPS) தேர்ச்சி பெற்றார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
தன் முதல் பணியாக தஞ்சை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக, வல்லம் பகுதிக்கு பணியமர்த்தப்பட்டார். பின்பு கிருஸ்ணகிரி தேன்கனிகோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய இவர், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு பெற்றார்.
பின்பு காவல் கண்காணிப்பாளராக, சென்னை இரயில்வே, பொருளாதார குற்றப்பிரிலு ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ள இவர், தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.