திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய சரகம் கோவில்பட்டி ரோட்டில் உள்ள மணி பல் மருத்துவமனை எதிர்புறம் கடந்த 15.11.2019 ம் தேதி துரைசாமி (65) என்பவர் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.49000/-ஐ திருடிச்சென்ற சரவணன் (30), மோகன் (27), ரமணா (31) , பாபு (45) (தற்போது அனைவரும் ராமநாதபுரத்தில் வசித்துவருகிறார்கள்;) ஆகிய நான்குபேர் மீதும் மணப்பாறை காவல்நிலைய குற்ற எண்: 394/2019 சட்டபிரிவு 380 இதச வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், திருட்டு வழக்கில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் இவர்கள், மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (31.01.2020) திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி