மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன் வழக்குகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் போலீஸ் சைபர் கிளப்பின் மூலம் ரூபாய் 4,89,429/- மதிப்புள்ள 35 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மணிவண்ணன்.IPS. அவர்களால் உரிய நபர்களிடம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூ.22,01,020 மதிப்புள்ள 188 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கிக் கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதன முறையில் நடந்த திருட்டு வழக்குகளில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையால் இதுவரை ரூபாய் 5,65,548/- உரியவர்களுக்கு அவருடைய வங்கிகணக்கில் திரும்ப கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களும் மோசடியாக வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருக்கவும் ரகசிய எண், வங்கிகணக்கு எண், OTP போன்ற விவரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்