திருச்சி : இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு குறித்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆண்/பெண் காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு கீழ்காணும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு வருகின்ற 18.11.2019-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
திருச்சிமாநகரம், திருச்சி,பெரம்பலூர், கரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். பெண்கள் வரும் 18.11.2019 காலை 5.00 மணிக்கு துவங்கப்படும். ஆண்களுக்கு வரும் 19.11.2019 காலை 5.00 மணிக்கு துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18.11.2019-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இத்தேர்வானது, கடந்த 09.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 18.11.2019-ம் தேதி அன்றும்இ 11.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 19.11.2019-ம் தேதி அன்றும், 12.11.2019-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 20.11.2019-ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு 21.11.2019-ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள், தாங்கள் பயிற்சி எடுத்த நிறுவனத்தின் பெயர், விளம்பரம் பொறித்த உடைகள் அணிந்து வரக்கூடாது. மேலும், வேறு எந்த அடையாளமும் பொறிக்கப்பட்ட உடைகள் அணிந்து வரக்கூடாது.
உடற்திறன் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் எக்காரணத்தைக்கொண்டும் தன்னிச்சையாக மைதானத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி