திருச்சி: திருச்சி மாநகரில் 27.01.2020ம் தேதியன்று விஜயரகு (பாலக்கரை பா.ஜ.க மண்டல பொறுப்பாளர்) என்பவர் கொலை செய்யப்பட்டார். கொலை சம்மந்தமாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட விஜயரகுவிற்கும்¸ அதே பகுதியில் உள்ள பாபு என்பவருக்கும் கடந்த 1 வருடமாக தனிப்பட்ட முன்விரோதம் இருந்துள்ளது. அவரை கைது செய்து¸ மேற்கொண்ட விசாரணையில்¸ ஹரிபிரசாத்¸ சுடர்வேந்தன்¸ சஞ்சய்¸ முகமது யாசர் ஆகியோர் உதவியுடன் இக்கொலை சம்பவத்தை நடத்தியது தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி